Posts

பார்ப்பனர்களைத் தோலுரிக்கிறார் விவேகானந்தர்

ஆதி சங்கரப் பார்ப்பனர் பற்றி விவேகானந்தர் ! ஆணவக்காரர் , இதயமில்லாதவர் , கொலைகாரர் சுவா : சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல மிகவும் கூர்மையாய் இருந்தது ; அவர் வாதம் புரிவதில் வல்லவர் ; மஹா பண்டிதர் ; அதில் அய்யமில்லை . என்றாலும் , அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை ; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது . மேலும் , அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர் . இக் காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார்போல , அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார் ! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக்கு இடமாகின்றன . விதுரன் பிரம்மஞானத்தை அடைந்தான் ; அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தினால் , என்கின்றார் . நல்லது ; இந் நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந்தால் , உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே , அவன் முற்பிறப்பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகைய ஞ...