மன்னர்களும் மனுதருமமும்


  நம் அப்பாவி மக்கள் ஏதோ மறைந்துபோன ஒரு நூலை - மனுதர்மத்தை - ஏன் இப்போது கொளுத்த வேண்டும் என்பதாக நினைக்கக்கூடும்.

ஆனால் இன்றைய சமூக அமைப்புநடைமுறைகள்நம்பிக்கைகள்நல்லது கெட்டது பற்றிய உணர்வுஏன் ஊர் அமைப்புக் கூட தர்மசாத்திரங்கள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனிய ஏற்பாடுகளின்படி நாடாண்ட மன்னர்கள் பல நூற்றாண்டு காலமாக சமூகத்தின் மீது பலாத்காரமாகத் திணித்து நிலை நாட்டியவை என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்நிலை நாட்டிவிட்ட பிறகு அவை இன்று இயல்பாகத் தோன்றுகின்றன - அவ்வளவுதான்.

சாமான்ய மக்கள் கூட மனுநீதி தவறாத ஆட்சி என்ற சொற்றொடரைத் தங்கள் பேச்சில் பயன்படுத்துவதைக் காணலாம்.

மனுநீதிச் சோழன் கதை இக்கருத்தைப் பிரபலப்படுத்தவே பரப்பப்பட்டு வந்தது.

கடந்த 33 ஆண்டுகளாகத்தான் இந்த நாடு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டுமன்னர்கள் அற்ற ஓட்டாட்சி நடக்கிறதுஆனால் ஒழிக்கப்பட்ட மன்னர்களின் செல்வாக்கோஅல்லது இந்த 33 ஆண்டுகளுக்கு முன்னால் அய்ம்பது அறுபது தலைமுறைகளாக அவர்களின் முன்னோடி மன்னர்களால் சமூகத்தில் திணித்து நிலைநாட்டிவிடப்பட்ட சமூக அமைப்புபொருளாதார நடவடிக்கைகள் ஏன் திருவிழாக்கள் எல்லாம்கூட இன்றும் அப்படியே நின்று நிலவி வருகின்றனஇதைக் காணத் தவறுகிறவர் ஒன்று அறியாமையில் உழல்கின்றவராக இருக்க வேண்டும் அல்லது புரிந்து கொள்ள மறுக்கும் புத்திசாலியாக இருக்க வேண்டும்.

நாம் விடைகாண வேண்டிய விசயங்கள் ஏராளம்.

 இந்த நாட்டில் மட்டும் பிறப்பால் ஏற்றத் தாழ்வு ஏன்?

             இங்கு மட்டும் தீண்டாமை ஏன்?

 உடன்கட்டை ஏன்?

 நால்வருணம் ஏன்அதற்குச் சட்ட சம்மதம் ஏன்?

 இன்றுவரை (பகிரங்கமாகஇரத்தக் கலப்பு ஏற்பட மறுக்கும் சமூக அமைப்பு எப்படி வந்தது?

 சட்டப்படிக்கான இந்துமதத் தலைவர்களான சங்கராச்சாரிகள் தீண்டாமை என் பிறப்புரிமை எனவும் வருணாசிரம தருமத்தைக் காப்போம் எனவும் சட்ட விரோதமாகவேப் பேசி வரவும்செயல்படவும் உரிமை எப்படி வந்ததுஅவர்களின் தரிசனத்துக்கு மாநிலமத்திய அமைச்சர்கள் பிரதானிகள் நத்திக்கிடக்க வேண்டிய அளவு ஆதிக்கம் அவர்களுக்கு எப்படித் தொடர்கிறது?

 காத்மாண்டுவில் மத மாநாடு கூட்டி இந்து மதத்தின் உயிர்க் கொள்கைகளான கர்மம்கர்ம பலன்மறுபிறப்பு ஆகியவைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய தீர்மானம் போடும் திமிர்த்தண்டத் தன்மை இன்னும் எப்படித் தொடர்கிறது?

 நாத்திகப் பிரச்சாரம் சட்ட சம்பந்தம் இல்லாமல் இருப்பதேன்?

             மூடத்தனத்தின் மொத்தக் குத்தகைதாரர்களான சுவாமிகள்புட்டபர்த்திகள்மகேஷ்யோகிகள் மலியக் காரணம் என்ன?

 தேசியத் தலைவர்கள் எல்லாம் சோதிடக் கும்பலின் சொல்கேட்டு ஆட்சி நடத்தும் அவலம் ஏன்?

 இந்திய அல்லது தமிழ்ச் சமுதாயம் ஒரு தேசிய சமூகமாக மலராமல் ஜாதிகளாகப் பிரிந்து சிதறுண்டு தவிக்கும் தன்மை ஏன்?

 கோடிக்கணக்கான மக்கள் தங்களை வாட்டும் வறுமையை இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கும் இயற்கை விரோத மனநிலை ஏன்?

 தங்களைச் சுரண்டிக் கொழுக்கும் கொடியோர்களையே வணங்கும் அப்பாவித்தனம் மக்களிடையே நிலவக் காரணம் என்ன?

 மக்கள் தங்களை ஏய்ப்போருக்கே ஏவல் செய்யும் இளிச்சவாய்த்தனம் எப்படி வந்தது?

 வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் வெற்றுச் சங்குகளாக கோடானுகோடி மக்கள் வதியக் காரணம் என்ன?

 கஞ்சி குடிப்பதற்கிலார் - அம்மக்கள் அதன் காரணங்கள் எவை எனும் அறிவுமிலா ஜென்மங்களாகக் காலங்கழிக்கும் நிலை ஏன்?

இவற்றிற்கும் இவைபோன்ற எண்ணிறந்த கேள்விகளுக்கும் விடை காண்பது ஒன்றும் சிரமம் இல்லைகொஞ்சம் முயற்சித்து நம் வரலாறுகளைநம் இலக்கியங்களைவேதங்களுக்கு நியாயம் கற்பிக்கும் தத்துவங்களைசமுதாய நடைமுறைகளைபழமொழிகளை அன்றாட வாழ்வில் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களை... இதைச் செய்அதைச் செய்யாதேஎனப் பெரியவர்கள் இடும் கட்டளைகளை எல்லாம் சற்று உற்று நோக்கி ஆய்ந்து அறிந்தால் அனைவருக்கும் விடை கிடைக்கும்.

இன்றுள்ள சமூக அமைப்பு திடீரென ஏற்பட்டதல்லஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூணூல் பூசாரிக் கூட்டமும்புவியாண்ட மன்னர்களும் கூட்டுச் சேர்ந்து செய்துஎதிர்ப்பாளர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்துசமூகத்தின் மீது திணித்து நடைமுறையாக்கி விட்ட ஒன்று ஆகும்.

நம் மூளைக்குள் உள்ள எண்ணங்கள்இயல்புகள் எல்லாம் பல நூறு தலைமுறைகளாக உள்ளே ஏற்றப்பட்டவை ஆகும்.

அத்தகு திட்டமிட்ட சதி முயற்சியின் பலனையே இன்று நாம் அனுபவிக்கிறோம்எனவே திட்டமிட்டு முயற்சிக்காமல் அவைகளை மாற்ற முடியாது.

பால்வினை நோயுள்ள பெற்றோர்களின் குழந்தைகள் பலவித நோய்களுக்கும்அவதிகளுக்கும் ஆளாவதுபோல்இன்றைய சமூகம் நேற்றைய சமுதாயத் தலைவர்களின் குற்றங்களின் பலனை அனுபவிக்கிறது.

நம் மன்னாதி மன்னன் எவனுக்கும் சட்டம் செய்யும் உரிமை இருந்ததில்லைஇது இந்திய அரசியல் கொள்கைஅவன் தர்மசாஸ்திரங்களின் கட்டளைகளை சமூகத்தில் நிறைவேற்றும் ஒரு கருவி மட்டுமேஅண்ணா சிவாஜி கண்ட இந்து ராச்சியம் எப்படிப்பட்டதென்பதை விளக்கினார்இந்து ராச்சியத்தில் எல்லா மன்னர்களும் சிவாஜிகளேஇந்தப் பொது விதிக்குத் தமிழ் மன்னர்கள் மட்டும் விதிவிலக்கல்ல!

சங்கம் மருவிய காலத்தில் தமிழ் மக்கள் வைதீக மத நாகம் தீண்டாத நிலையில் இருந்தனர்மன்னர்கள் ஓரிருவர் மட்டும் ஆரியப் பார்ப்பனர் வலையில் விழுந்து வந்தனர்பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிகளும் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிகளும் பெருகத் தொடங்கினர்ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியர்கள் அருகத் தொடங்கினர்அறவிலை வணிகன் ஆய் அலன் என மார்தட்டிய ஆய் போன்ற குறுநில மன்னர்கள் குறைந்து வந்தனர்சேரமான் பெருமாள் நாயனார்கள் பெருகினார்கள்மெல்ல மெல்ல இம்மன்னர்கள் துணையோடு புரோகிதக் கூட்டம் மக்களின் அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மதம் சார்ந்ததாக மாற்றுவதில் வெற்றி பெற்று வந்தனர்எதிர்ப்புகள் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனகுரூரமான கழுவேற்றம் அன்றாட நிகழ்ச்சியாகியதுமாற்றுக் கருத்தினர் நூல்கள் நீரிலும் நெருப்பிலும் இடப்பட்டு அழிக்கப்பட்டனமெல்லத் தமிழ்ச் சமுதாயம் ஆரிய மத கருத்துக்கள்பால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டது.

இவ்வளவுக்கும் மத்தியில் கரூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டு வந்த இரும்பொறை மன்னர் வம்சத்தார் மட்டும் சமணத்தை ஆதரித்து வந்த அரிய காட்சியை கி.பி.3ஆம் நூற்றாண்டு வரை பார்க்கிறோம்.

பின்னர் தமிழகத்தை ஆண்ட மாமன்னர் முதல் குறுநில அதிபர் வரை அனைவர்க்கும் இடையே மனுதர்மத்தை மக்கள் மத்தியில் நிலைநாட்டுவதிலே ஒருவித வெறித்தனமான போட்டியே இடைவிடாமல் இருந்து வந்திருக்கிறதுஅவர்களின் செப்பேடுகளும் மெய்க்கீர்த்திகளும் இந்தச் செய்தியை விரித்துரைக்கின்றன.

 மாறவர்மன் சுந்தரபாண்டியன் மனுநெறி தலைப்ப மணிமுடி சூடி ஆள்கிறான் என அவன் மெய்க்கீர்த்தி பறைசாற்றுகிறதுமேலும்,
நால்வகை வேதமும் நவின்றுடன் வளர
அய்வகை வேள்வியும் செய்வினை இயற்ற
அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ -
ஆண்டிருக்கிறான் அவன்விட்டானா அதோடு?
சமயமும் நீதியும் தருமமும் தழைக்க...
கடவுள் வேதியர் அருந்தொழில் வேள்விச்
செங்கனல் வளர்ப்ப!....

தன் ஆட்சியை நடத்தி இருக்கிறான்.

 குலசேகரப் பாண்டியனோ முத்தமிழும் மனுநூலும் நான்மறை முழுதும் எத்தவச்சமயமும் இனிதுடன் விளங்க இறை மாட்சி நடத்தி இருக்கிறான்.
 சோழர்கள் என்ன பாண்டியர்களுக்கு இளைத்தவர்களா?

ஒப்பரிய மறைநூலும் உரை திறம்பா மனுநூலும்
செப்பரிய வடகலையும் தென்கலையும் தலையெடுப்ப
நீதிதரு குலநான்கும் நிலைநான்கும் நிலைநிற்ப
ஆதியுகம் குடிபுகுத அறு சமயம் தழைத்தோங்க
மூன்றாம் இராசராச சோழன் ஆட்சி நடத்தியிருக்கிறான்.

 முதலாம் இராசாதிராசன் விளங்கு மனுநெறி அசுவமேதஞ் செய்து பரிபாலனஞ் செய்திருக்கிறான்இராசமகேந்திரசோழனோ தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய மன்னனாகத் தன்னை மார்த்தட்டி அறிவித்துக் கொள்கிறான்.

முதலாம் குலோத்துங்கன் மனுவாறு பெருக மக்களை ஆள்வதாக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறான்விக்கிரமச் சோழனோ மனுநெறி வளர்த்து நாடாள்வதாக நாப்பறை அடிக்கிறான்இரண்டாம் குலோத்துங்கனோ மனுவாறு விளங்க செங்கோல் செலுத்துவதாகச் செம்மாந்து கூறுகிறான்இரண்டாம் இராசராசன் மனுவாணை தனி நடாத்தி மக்களைப் புரந்ததாகப் பெருமை கொள்கிறான்இரண்டாம் இராசாதிராசன் அமைவில்லா மனுவொருக்க ஆதியம் பாடி நிலைநிற்க அகிலத்தை ஆண்டதாக அறைந்து கூறுகிறான்மூன்றாம் குலோத்துங்கன் மனுவின் நெறி தழைத்தோங்கசெயல்வாய்ந்த மனுநூலும் - பெருக கோலோச்சினான் என அவன் மெய்க்கீர்த்தி விளக்குகிறதுமூன்றாம் இராசராசன் பொருவில் மனுநெறிவாழ பொன் மகுடம் கவித்தருளி புரோகிதக் கூட்டத்திற்கு பொழுதளந்து சேவை செய்திருக்கிறான்.

இப்படி ஆயிரமாயிரம் அரசாணைக் கல்வெட்டுக்களை நாடெங்கும் பரக்கக் காணலாம்.

இதில் அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என அந்த மன்னாதி மன்னர்களை மருள வைத்திருக்கிறார்கள் சனாதனிகள்.

வேதபுரியினர் இட்ட கட்டளைப்படி அவரவர்க்கு ஒரு குலத்தொழில் விதித்து அதை மீறுவோர்க்கு கொடும் தண்டனையும் வழங்கி உள்ளார்கள்ஜாதி ஆச்சாரத்தை நிலை நிறுத்தும் பொறுப்பை பிரமதேய (அக்கிரகாரசதுர்வேதி மங்களங்களின் ஊர்ச்சபைகளே ஏற்றிருந்தனபார்ப்பனர் அக்ரகாரத்தில் தனித்து வாழ்வதை அரசர்கள் பெருமையோடு காத்து வந்தனர்அவர்களுக்கு மானியங்களாக இறையிலி நிலங்கள்பாரதவிருத்திபட்டவிருத்திவேதவிருத்தி புராணவிருத்தி தேவதாயம் - இப்படி எத்தனையோ பெயர்களில் அவர்களுக்கு நாட்டில் உள்ள நல்ல நிலங்களை எல்லாம் தாரை வார்த்தார்கள்.
இடையில் வந்த களப்பிரர்கள் அந்த நிலங்களை பிடுங்கி உழவர்க்கு கொடுத்தனர்ஆனால் அவர்களை ஒழித்துக்கட்டி மீண்டும் வந்த மனுநீதி தவறா தமிழ் மன்னர்கள் திரும்பவும் உழவர்களிடமிருந்த நிலங்களைப் பார்ப்பனரிடமே சேர்த்து விட்டனர் என்பதற்கும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

கிராம சபையாரும் அரசு அதிகாரிகளும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்க நேரும் போது எழும் அய்யப்பாடுகளை சாத்திரங்களில் வல்லுனரான பட்டர் பெருமக்களிடம் கேட்டுத் தெளிந்து அவர்களின் கருத்திற்கேற்பவே தீர்ப்பு வழங்கி வந்தனர்.

ஊழியம் செய்யும் வகுப்பார்கள் யாரும் ஊரை விட்டு போகக்கூடாதுபோனால் அவர்கள்மீது நடவடிக்கை உண்டு.

ஜாதி ஆச்சாரங்களை வரையறுத்து இன்ன வகுப்பார் இன்னின்ன சடங்குகள்உடைகள்உரிமைகள் ஆகியவைகளைத்தான் கைக்கொள்ள வேண்டும் என அரசாணை பிறப்பித்தனர்அந்த ஆணையும் சாத்திர வல்லுனரான பார்ப்பனர்களின் அபிப்பிராயப்படியே வழங்கப்பட்டதுஉதாரணமாக அய்ந்து வகைப்பட்ட கம்மாளர்களை அவர்கள் பிரதிலோமர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களான அனுலோமரைச் சேர்ந்தவர்கள் என்றும்எனவே அவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாம் என்றும் ஆனால் உபநயன மந்திரம் ஓதும் உரிமை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியதாகப் பல கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

ஒரு கல்வெட்டு ஒரு வகுப்பாரின் உரிமைகளை அறிவிக்கின்றதுஅவர்கள்நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கு ஊதி பேரிகை கொட்டிக் கொள்ளலாம்பாதரட்சை போட்டுக் கொள்ளலாம்வீடுகளுக்கு சுண்ணாம்பு பூசிக் கொள்ளலாம்.

அதேபோல இன்னொரு கல்வெட்டு இடையர்களின் உரிமைகளை வரையறுக்கிறதுஅவர்கள் நன்மைகளுக்குச் சிவிகை ஏறலாம்தீமைக்கு மேல்வளைவுள்ள பாடைகட்டி அதன்மேல் பச்சைப்பட்டுபுலியூர்பட்டு என்பவற்றைக் கட்டிக் கொள்ளலாம்பேரிகை கொட்டலாம்இவற்றை செம்பில் அவர்கள் வெட்டிக் கொள்ளலாம்.

எந்தெந்த வகுப்பார் கோவில் முறைகளை எவ்வெப்படிச் செய்யவேண்டுமென்பதற்கும் எங்கெங்கு நின்று கும்பிடலாம் என்பதற்கும் வரையறை உண்டுஇதைப் பின்பற்றி இன்றுவரை பல தீர்ப்புகள் வழக்கு மன்றங்களிலே அளிக்கப்பட்டு வருகின்றன. 1914ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீர்ப்பு ஒன்றில் 1912 (எஸ்..1554/1912) திருநெல்வேலி மாவட்டம் பனக்குடியில் உள்ள ஸ்ரீஇராமலிங்க சாமி கோவிலில் இலைவாணியர் ஜாதியாரும்பார்ப்பனர்கள்வெள்ளாளர்கள்முதலியார்கள் முதலியோர்கள் கோவிலின் எந்தெந்த இடம்வரை செல்லலாம்என்ன கிரமத்தில் வணங்கலாம் என்பனபற்றி சாஸ்திர ஆதாரங்களைக்காட்டி தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஜாதி ஒழுக்கமும்நீதிஅறமும்பிறழாது நீதி தருகுல நான்கும் நிலை நான்கும் நிலை நிற்ப பல நூறு ஆண்டுகள் பலாத்காரத்தின் துணைகொண்டு நிலை நாட்டிவிட்ட மனுதர்ம வாழ் நெறியே இன்றைய சமூகத்தின் வாழ்க்கை நெறியாக அமைந்து உள்ளது.

அய்யாயிரம் ஆண்டுகட்கு முன்வாழ்ந்த கன்பூசியசின் சிந்தனைகள் சீனச் சமூகத்தில் இரண்டறக் கலந்துசீன மக்களின் சமநெறிச் சமூக அமைப்பு முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்கிறது என்று கண்டவுடன்அந்த நாட்டு அரசும் தலைவர்களும் நாடு முழுவதும் கன்பூசியஸ் சிந்தனைகளை எதிர்த்துஅதை ஒழிக்கும் பிரச்சாரங்களையும் செயல்களையும் மேற்கொண்டார்கள்!
இங்கே நம் சமூகத்தைச் சிதைத்துச் சின்னா பின்னமாக்கிச் செல்லரிக்க வைத்தது ஒரு சிறு புல்லுருவிக் கூட்டம்!

இன்று வரை நம் சமூகம் முழுமையின் மீதும் இந்தப் புல்லுருவிக்கூட்டம் ஆதிக்கம் செலுத்தக் காரணமாய் இருந்த தரும சாத்திரங்களின் தலையாகத் திகழ்வது மனுதரும சாத்திரம்!

சீனத்திலேயே புரட்சியாளர்கள் கன்பூசியஸ் சிந்தனைகளை எதிர்த்ததுபோல் இங்கே இதனை எதிர்த்துத் தீயிட்டுப் பொசுக்கும் பெரும்பணியில் திராவிடர் கழகம் ஈடுபட்டுள்ளது!

இப்பெரும் பணிக்காகத் தமிழர்களைத் திராவிடர் கழகம் அறைகூவி அழைக்கிறது!

தமிழர்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டுவர வேண்டும்!

5.2.1984ஆம் நாள் கோவை பூளைமேடு



  
நூல் - மன்னர்களும் மனு தருமமும்

ஆசிரியர் கரூர் பி.ஆர்.குப்புசாமி பி,ஏ.பி.எல்.
                                               பி.ஜி.டிப்.ஆந்த்ரோ


Comments

Popular posts from this blog

பார்ப்பனர்களைத் தோலுரிக்கிறார் விவேகானந்தர்

சனாதனமும் சமீபதனமும்